தமிழக அரசின் 2017 -18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழக அரசின் கடன் தொகை ரூ 1 லட்சம் கோடி அதிகரித்து உள்ளது. இதனையடுத்து கடன் தொகை ரூ 3,14,366 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
2017 -18ம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ரூ 41,977 கோடியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் 2017 -18ல் வருவாய் பற்றாக்குறை ரூ 15,931 கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ 12,318 கோடி என்றார்.
Comments