பன்னீர் முதல்வராக 30 லட்சம் பேர் மிஸ்டு கால்! முதல்வர் நன்றி தெரிவித்து பதில்!
![](https://static.wixstatic.com/media/d572ed_1de09a662f3d42c88fc728ab98c26583~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_1de09a662f3d42c88fc728ab98c26583~mv2.jpg)
முதல்வர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து 30 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் பன்னீர்செலவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், சமூக வலைதளங்களை பயன்படுத்தி, அவருக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி, பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
‘நான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்’ என்ற தலைப்பில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போர், 92892 22028 என்ற எண்ணுக்கு, ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம் என, சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இதற்கு, பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிப்.,8 – ல் இந்த எண் வெளியிடப்பட்ட, 45 நிமிடங்களில், 20 ஆயிரம் பேர், மிஸ்டு கால் கொடுத்தனர். மூன்று மணி நேரத்தில், 1.20 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இன்று (பிப்.,11) வரை 30 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவிக்கும், ஆடியோ பதிவு அனுப்பப்படுகிறது.
Comments