ஆப்கன் தலைநகர் காபூலில் பயங்கர குண்டு வெடிப்பு..! 80 பேர் உடல் சிதறி பலி..!
- crazynewschannel
- Jun 1, 2017
- 1 min read

ஆபகன் தலைநகர் காபூலில் இன்று காலை சரியாக 8.25 மணிக்கு தண்ணீர் லாரியில் வைக்கப்பட்ட வாகன குண்டு வெடித்துச் சிதறியது. காலை வேளை என்பதால் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் 80 பேர் அந்த அடத்தில் உடல் சிதறி பலியானார்கள். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த ஸான்பக் ஸ்கொயர் பகுதியில் ஜெர்மனி தூதரகம்,பிரிட்டிஷ் தூதரகம்,பிரான்ஸ் தூதரகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும். தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை யாரும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு
பொறுப்பேற்கவில்லை.
காபூல் போலீஸ் செய்தி தொடர்பாளர் பஷீர் முஜாகித் கூறும்போது, குண்டு வெடிப்பு நடந்ததும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை உடனே ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடற் சிதறி பலியானவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. பெரும்பாலும் அவர்கள் பணிகளுக்கோ அல்லது வேறு வேலையாகவோ வெளியூர்களில் இருந்து வந்தவர்களாக கூட இருக்கலாம்.
பெரும்பாலும் இறந்துபோனவர்கள் பொதுமக்களாகத்தான் இருக்க வேண்டும். சுமார் 1,500 கிலோ வெடி பொருட்களை கொண்ட இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இன்னும் எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றார்.
இந்த குண்டு வெடிப்பில் ஆப்கன் கார்ப்பரேஷன் டிரைவர் ஒருவரும் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
Comments