சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் பல்லாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் ரயிலை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார்.
ரயில் நடுவழியில் நின்றதும், பதறிய பயணிகளும், ரயில் கார்டுகளும் கீழே இறங்கிப் பார்த்தனர். கார்டு வாக்கி டாக்கி மூலம் டிரைவரை தொடர்புகொண்டார். எந்தவித பதிலும் வராத நிலையில், கார்டு டிரைவரிடம் விரைந்தார். அங்கு டிரைவர் மயங்கிய நிலையில் உள்ளதைக்கண்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், வேறு டிரைவர் வரவழைக்கப்பட்டு அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது.