அடுத்தது என்ன? நிமிடத்துக்கு நிமிடம் தமிழக அரசியலில் பரபரப்பு! கவர்னர் முடிவு?
![](https://static.wixstatic.com/media/d572ed_48f59d9cc4e24a4f9584ade09c1a82fb~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_48f59d9cc4e24a4f9584ade09c1a82fb~mv2.jpg)
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு ஒன்றுமே நடவாததுபோல ஜெயலலிதா மெரீனாவில் உறங்கிக்கொண்டிருக்கிறார். அதே ஜெயலலிதாவின் சமாதியில் 40நிமிடங்கள் அமர்ந்து ஞானோதயம் பெற்ற முதல்வர் பன்னீர்செல்வம் முதல்முறையாக வாயை திறந்ததால் இன்று தமிழக அரசியல் நொண்டியத்துக் கிடக்கிறது.
பதவியே வேண்டாம் என்று உத்தரவாத கடிதம் கொடுத்துவிட்டு தோழியோடு மீண்டும் ஐக்கியமாகி தோழி இறக்கும் வரை அமைதி காத்த சசிகலா இன்னொருவர் முதல்வர் பதவி ஏற்கவும் அனுமதி அளித்துவிட்டு பின்னர் எப்படி மனம் மாறினார். பொதுச்செயலர் பதவி ஏற்றதும்,பின்னர் முதல்வர் பதவியும் வேண்டும் என்கின்ற மனஓட்டத்தை அவரிடம் விதைத்தது யார்?அவரிடம் அதைப்போன்ற எண்ணங்கள் இருந்தது போல தெரியவில்லை.
எல்லாம் ஏற்படுத்தப்பட்ட வினைகளாகவே தெரிகிறது. அவரது செயல்பாடுகளை உற்று பார்க்கும்போது அவர் ஒரு பொம்மை போலவே செயல்படுவது தெரிகிறது. ஆக அவரது குடுமபத்தாரின் தூண்டுதல் இருப்பது தெரிகிறது. ஆட்சியை கைப்பற்றுவது அவர்களது நோக்கம் சிறிதளவு தான்.
அவர்களது பிரதான நோக்கம் கட்சியை கைப்பற்றுவதே. இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி முடிந்த பின்னர் அவர்களை இந்த நாடு சீந்தாது என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்? அவர்கள் என்ன சிறு குழந்தைகளா?
எது எப்படியோ ஜெயலிலதாவின் சொத்துக்கள் முறையாக, சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டும். தமிழகத்தின் அசாதாரண சூழல் ஏற்படுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு முக்கிய காரணமாகவே உள்ளார்.
இந்த நிலையில் யார் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற போட்டி உருவாகியுள்ளது. அந்தப்போட்டிக்கான தீர்ப்பை வழங்க கவர்னர் நீதிபதியாக செயல்பட வேண்டும்.அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பில் நிமிடத்திற்கு நிமிடம் திக்..திக்.. பயணத்தில் தமிழகம்??