போலீஸ் வைத்த சிசிடிவி கேமராக்களை போலீசே உடைத்த கதை! கலவரத்தின் போது நடைபெற்ற உண்மை!
- crazynewschannel
- Feb 4, 2017
- 1 min read

சென்னையில் மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய வன்முறை குறித்த செய்திகளை நக்கீரன் இணையதளம் வெளிவந்துள்ளன.
வன்முறைக்கு முக்கிய காரணம் 3 போலீஸ் உயர் அதிகாரிகளாம். அண்ணாநகர் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா,திருமங்கலம் உதவி ஆணையாளர் காமில் பாஷா, தென்சென்னை போக்குவரத்து உதவி ஆணையாளர் யுவராஜ் ஆகிய இந்த 3 அதிகாரிகள் தலைமையில் தான் ஒட்டுமொத்த வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டதாம்.
தாக்குதல் படலத்தை தொடங்கும் முன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசாரே அடித்து உடைத்துள்ளனர்.
பிறகு ஊடகவியலாளர்களை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். தினகரன் செய்தியாளரை ஒரு காருக்குள் வைத்து குமுறி எடுத்துள்ளனர்.
கடும் அடக்குமுறைகளுக்கு இடையேயயும், நியூஸ் 18 சேனல் உள்ளிட்ட சில ஊடகங்கள் தாக்குதல் காட்சிகளை மறைவிடங்களில் இருந்து எடுத்து ஒளிபரப்பியுள்ளனர்.
சமூக விரோதிகளை கண்காணிக்கவே சிசிடிவி கேமராக்கள் பல கோடி ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பொறுத்தப்பட்டுள்ளன. அவற்றை போலீசாரே உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Yorumlar