வாட்ஸ்அப்பில் புதிய வசதி, எங்கிருந்து மெசேஜ் அனுப்பினாலும் இடத்தை காட்டிக்கொடுக்கும்
வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டில் எங்கிருந்து ஒருவர் மெசேஜ் அனுப்பினாலும், அவர்களின் இடங்களை டிராக் செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் ஸ்டேட்டஸ் போடும்போது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். இது தற்போது உள்ள பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதி வந்து விட்டால் யாராவது தவறாக வாட்ஸ்அப் பயன்படுத்தி பெண்களுக்கு மெசேஜ் அனுப்பினால், அவர்கள் இருக்கும் இடத்தை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.