வீட்டுவாசலுக்கே வந்து கடன் : உடனடி பண தேவைக்கு – ஓப்பன்டேப்
![](https://static.wixstatic.com/media/d572ed_832ce6229ef042a2b1ee1a71f52f4294~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_832ce6229ef042a2b1ee1a71f52f4294~mv2.jpg)
சென்னையைச் சார்ந்த புதிய கடன் உதவி நிறுவனமான ஓப்பன்டேப் (OpenTap) ‘வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே வந்து கடன்’ என்ற அதிரடி அறிவிப்புடன் தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளது.
‘ரூ.6,000 முதல் ரூ.20,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை, வாடிக்கையாளரின் கடன் தேவைக்கு உடனடி அப்ரூவல், வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே சென்று கடன், வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாக’ கூறுகிறார் ஓப்பன்டேப் (OpenTap) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில் நடராஜன்.
இந்தியாவில் பல வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் உள்ள போதிலும், யாரும் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதாக தெரியவில்லை. ஆகையால் இதற்குக் குறைவாக சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களை தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதிக அக்கறையுடன் அணுக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இப்போது, எங்களைப் போன்ற நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதை வங்கிகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. குறைந்த சம்பளம் வாங்கும் வாடிக்கையாளருக்குச் சேவை வழங்க வங்கிகளில் போதிய கட்டமைப்பு இல்லை. ஆகையால் எங்களை போன்றவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
தற்போதைக்கு, சில்லறை மற்றும் மாத சம்பள வாடிக்கையாளர்கள், குறிப்பாக ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை நடுத்தர சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களே எங்களுடைய இலக்கு. வாடிக்கையாளர் கடனுக்கு விண்ணப்பித்த உடன், அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று கடன் தருவது அல்லது அவருடைய வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துவிடுவோம். வாடிக்கையாளரின் திருப்பி செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் வழங்குகிறோம். இப்போது, அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த உள்ளோம். உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்ய எங்களைப் தொடர்ப்புக்கொள்ளலாம்” என்றார் செந்தில் நடராஜன்.
Related Topics : Tamilnadu