அட, இவருக்கு வந்த லக்- காதில் புகையுடன் மற்ற ஹீரோயின்கள்
கேரளா நிவேதா தாமஸ், விஜய் குருவி படம் மூலம் இங்க அறிமுகம். அதன் பின் ஜில்லாவில், விஜய்க்கு தங்கை,பாபநாசத்தில் கமலுக்கு மகள் என்று நடித்தவர். தெலுங்குக்கு நானி படம் ஜென்டில்மேன் மூலம் அறிமுகம்.
பெரிய பெரிய படங்கள் எதுவும் தெலுங்கில் இன்னும் பண்ணாத நேரத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆரின் புதுப் படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். நிவேதாவையும் ராசி கன்னாவையும் புக் செய்த படக்குழு அடுத்த மாதம் ஷூட்டிங் போக போகிறது.
இது இல்லாமல் மீண்டும் நானியோடு இன்னொரு படத்தில் வேறு கமிட் ஆகியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் ஒரு ஐட்டம் சாங் ஆடவே முன்னணி ஹீரோயின்கள் லைன் கட்ட, நேற்று வந்த இந்த நிவேதாவுக்கு கிடைத்த லக்கை பாரேன்னு, மற்ற ஹீரோயின்கள் காதில் புகையாம்.