1,050 கிராமங்களில் இலவச வைபை வசதி
- crazynewschannel
- Feb 2, 2017
- 1 min read

டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு புரட்சிகளை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார். அதற்காக எல்லா துறைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
மேலும், ரொக்கமில்லா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பல்வேறு இடங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1,050 கிராமங்களில் இலவச வைபை வசதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வைபை சேவை மூலம் கிராம மக்கள் தங்கள் செல்போன்களில் இன்டர்நெட் வசதியை இலவசமாக பெற முடியும். ‛டிஜிட்டல் வில்லேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரயில்நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச வைபை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related Topics : Tamilnadu
Коментарі