2000 ரூபாய் நோட்டால் கார் அலங்காரம் : காதலிக்காக செய்த காரியத்தால் போலீசில் சிக்கிய காதலன்!
- crazynewschannel
- Feb 15, 2017
- 1 min read

காதலியை கவர்வதற்காக 2000 ரூபாய் நோட்டால் காரை அலங்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்களது காதலை வெளிப்படுத்தினர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை வித்தியாசமான முறையில் கவர வேண்டும் என்பதற்காக தன்னுடைய காரை புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்தார். பின்னர், அதனை தன் காதலியிடம் காட்டுவதற்காக சென்றுள்ளார்.
2000 ரூபாய் நோட்டால் அலங்கரிக்கப்பட்ட கார் சாலையில் செல்வதை கண்ட போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடித்து, இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது வரை தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில், எங்கிருந்து பணம் கிடைத்தது என்று அந்த இளைஞரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
コメント