அமெரிக்காவில் 1 லட்சம் வெளிநாட்டு விசாக்கள் ரத்து.. டிரம்ப்பின் தொடரும் அதிரடிகள்
![](https://static.wixstatic.com/media/d572ed_25a4166f898d42df8117d8559ecf54f6~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_25a4166f898d42df8117d8559ecf54f6~mv2.jpg)
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந்தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார்.அதில், உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டிருப்பதும், சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்கா வர முடியாது என்பதும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
டிரம்பின் உத்தரவுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அலெக்ஸ்சாண்டிரியா மத்திய நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாதிடும் போது, டிரம்பின் பயண தடை உத்தரவுக்கு பிறகு ஒருலட்சத்திற்கும் மேலான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
コメント