144 தடை இருந்தும் மெரினாவில் திமுக, அதிமுக நிகழ்ச்சிகள்! மாணவர்களுக்கு மட்டும் தான் தடையா?crazynewschannelFeb 3, 20171 min read திமுக நிறுவன பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மெரினாவில் தற்போது 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டு, கூட்டமாக வருபவர்களை துளைத்தெடுத்து வருகின்றனர்.ஆனால் திமுக சார்பில் இன்று மாபெரும் அமைதி ஊர்வலம் மெரினாவில் நடைபெற்றது. இதை போலீஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவர்களுக்கு மட்டும் தான் 144 தடையா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Comments