நொடிக்கு 100 டுவிட்டுகளில் மிதந்த ஓபிஎஸ்; இந்தியாவிலேயே முதலிடத்தில் ஹாஸ்டேக்குகள்
![](https://static.wixstatic.com/media/d572ed_b055a38b597c442984e668db82940aad~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_b055a38b597c442984e668db82940aad~mv2.jpg)
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இரவு 9 மணிக்கு மெரீனா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து சுமார் 45 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, நிருபர்களுக்கு அதிரடி பேட்டியை அளித்தார்.
இந்த பேட்டி தற்போது முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சசிகலாவுக்கு எதிராக பேட்டியளித்தார். மேலும், மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டியால் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடையேயும், அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடிய விடிய நடந்த தமிழ்நாட்டின் இந்த அரசியல் சூழ்நிலை, இந்திய அளவில் ஊடகங்களையும் தூங்கவிடாமல் செய்தது. முதல்வர் பன்னீர்செல்வமும் விடியற்காலை 4 மணி வரை மீடியாக்களை சந்தித்துப் பேசினார்.
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களும் இரவு முழுவதும் கண்விழித்து தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை வெளிப்படுத்தியது என்று சொல்லலாம்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #ஓபிஎஸ் #Sasikala #ADMK #OPannerselvam #Panneer #IsupportOPS ஹாஸ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்திருந்தது.
குறிப்பாக, #OPSvsSasikala என்ற ஹாஸ்டேக்கில் சசிகலாவை விமர்சனம் செய்யக்கூடிய பதிவுகளும், விறுவிறுப்பான விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. பேஸ்புக், டுவிட்டர் தளத்தில் இரவு முழுவதும், இந்த ஹாஸ்டேக்குகளைப் பயன்படுத்தி நொடிக்கு 100 பதிவுகளைப் பார்க்க முடிந்தது.
Comments