நாடு முழுவதும் 10ரூபாய் நாணயத்தை வாங்க வங்கிகள் மறுத்துவருகின்றன. பத்து ரூபாய் நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது வங்கிகள் நாணயத்தை வாங்க மறுப்பு ஏன் என வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தேவிகாபுரம் சாலையிலுள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்ததால், வாடிக்கையாளர்கள் வங்கி முன் அமர்ந்து நாணயத்தை தரையில் கொட்டிவைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Comentários